Home-Box-02

Bishop.B. Nicholas Rajasingam.
- Founder of ISHI Mission

Praise the Lord and I’m glad to meet you through this website and I like to share my inspirational testimony and my faithful journey with Lord Jesus Christ.
My full name is Balachandran Nicholas Rajasingam, I was born in 1970 in Mullaitivu. After my studies, I started to work there, and by 1988 I had to take my manager’s mom to Jaffna Hospital. While we were going to Jaffna in midst a gathering of Indian armed force captured me on suspicious and expressed to torture me, around then a brother came to me and shared God’s words and asked me to believe in Jesus Christ and he will release me, however I began to contend with him as I was bought up in a Catholic family. yet the entire day he talked about Jesus and finally I disclosed to him that I will trust him in the event if he (Jesus) helped me to release from this terrible situation. And following day morning Jesus marvellously released me from Indian Army.
Starting there onwards I trusted that Jesus is the only God and I acknowledged him as My Saviour and went to Church each Sunday. yet my family didn’t care for it thus I couldn’t take the baptism and the later on in 1990 I went to India and got Baptized in the name of Jesus Christ and I commit myself for his ministry in February 1991
In 1991 may 1st we started a church (ISHI FULL GOSPEL MISSION), then I Married and in 1994, I was ordinated as ‘pastor’ at Zion Christ Church, Nagapattinam, Tamil Nadu, India. I proceed with Lord Jesus Christ ministry till 1995 in Indiaand What’s more, and by that time lord God spoke to me to go back to Sri Lanka, as per God’s will I returned to Sri Lanka and with such so much difficulties and obstacles God helped me to begin the ministry in Sithamparapuramrefugee campand following 3 months my family joined along with me. And Our Lord God Guided me throughout the years as he promised in Exodus 10:24 “I am making a covenant with you. Before all your people I will do wonders never before done in any nation in all the world. The people you live among will see how awesome is the work that I, the Lord, will do for you.”
Later in 1998,As more people accepted Christ as their personal Saviour, as a result of more devotees, our beloved Bishop planned to build a church in Sithamparapuram andby the God’s grace and powerful prayers and the church was successfully dedicated in August 1998.Around the same time, we additionally begun social works such as Free Medical Campsfor every Fridays and vocational trainings for ladies & through this many works, many families were blessed. In the same year (1998), we started a Boys orphanage home and later it was taken over by the pastor who was appointed as a coordinator.
Jesus Christ was with me & my ministries and his works were amazing and marvellous and later in 2002, by the grace of God we called Pastors (Lectures) from India and started a Vacation Bible school (“Agape Bible School”) and 2 batches were passed out from this ministry.
Then in 2004 January, God helped me to improve my ministry to next level and opened the door for foreign ministries and God spoke with me to start a ministry in Vavuniya town. Then me and family came to Vavuniya and rented a house for 6 months and run our ministries& later on by God’s effortlessness our Lord Jesus Christ help to build an own house at Kovilkulam,Vavuniya.
In 2004, we started a Boys Orphanage with a help of Germany Followship and it was under control of them and went well.

As Jesus promise, in 2006 God helped us to bought a land in Rambaikulam (Vavuniya Town) and by 2007, Almighty God helped us to construct an impermanent shed of 50 feet. Then the ministry was continued by the God’s grace. During years 2006 to 2009 as we all knew there was a major war in Sri Lanka. Indeed, even all through the war time God help the ministry to spread God’s love and help towards affected people.
From these years, I was doing ministries in foreign countries and we collected the money and Later on in 2010, according to God’s word, Lord Jesus help to start the foundation work for the church construction and in those time, Jesus helped me to face so many difficulties and guide me in the right path and By God’s marvellous grace, the Church was dedicated in 21st of March 2012. For this occasion, Bro.Mokan.C.Lazarus was there and shared the word Of God.
Then in 2014 August 23rd, I was ordinated as ‘Bishop’ in Germany and from there to now, God helping me to face so many difficult situations and guiding me through his words.
Till now, there were many pastors and leaders left from me and started a new ministry and some of them left out because of the problems and difficulties that we faced in our ministries.

Whenever I felt bad and discouraged, God strengthen me his powerful words and miraculous activities for each and everyday. Now God helping me to do so many social works such as free medical camps, providing free reading glasses to the poor people and giving first-aid boxes to the rural area schools and etc.
If you are interest to help us, check out the link below:
About MY FAMILY:
My wife name is R.Victoriya and she has being with me in every situation of my life and helping me to do this ministries. I have 6 children and First son nameis R.AjanthanRomold (Reegan) and he is acting as our mission’s Secretary and he his wife is R.Anushiya and he has 2 children (1st: Anbu Nicholas & 2nd : Nesi Nicholas).My second son name is R.Antony Francis (Roshan) and he is in charged for Sithamparapuram branch church and his wife name is A.Roshani and he has a son (Jackson). My third son name is R.Andrew and he is also incharged for Sithamparapuram branch church. My Fourth daughter name is R.Kiruba and she is a Sunday school teacher. My Fifth daughter name is R.Kirushanthi and she is doing her higher studies in Batticaloa.
My last son name is R.Christo Emmanuel, he is doing his higher studies in Colombo.

God Almighty is doing extraordinary things through Ishi Mission and please uphold me, my family and our ministries through your prayers.

God bless you.
Bishop.Rajasingam.

பேராயர்.பி.என். ராஜசிங்கம்
ஈஷி பூரண சுவிசேஷ சபை தலைவர்.

நான் முல்லைத்தீவில் 1970இல் பிறந்தேன். என்னுடைய படிப்பு முடித்த பின்பு அங்கேயே வேலை செய்ய ஆரம்பித்தேன். 1988ஆம் ஆண்டு என் முதலாளியின் அம்மாவை யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துக் கொண்டு செல்ல நேரிட்டது அவர்களை அழைத்துச் சென்றிருந்த போது இந்திய ராணுவப் படை என்னை சந்தேகத்தின் பேரில் கைது செய்து என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள். அங்கு ஒரு சகோதரன் வந்து தேவனுடைய வார்த்தையை சொல்லி என்னை இயேசுவை நம்பும்படி கேட்டுக்கொண்டார். நான் ஒரு கத்தோலிக்க குடும்ப பின்னணியில் இருந்து வந்தபடியால் நான் அவருடைய வார்த்தைகளை நம்பாமல் அவருடன் சண்டை போட்டேன். பின்பும் அவர்  இயேசுவை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது நான் “என்னை இங்கு இருந்து வெளியே போக பண்ணினால்” நான் இயேசுவை நம்புவேன் என்று கூறினேன். மறுநாள் என்னை ராணுவத்திடமிருந்து இயேசு அற்புத விதமாக வெளியே போக உதவி செய்தார். அதன் பிறகு இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவன் என்று நான் நம்பினேன் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு என் வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுத்தேன். நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் சபைக்கு சென்றேன். என் குடும்பம் நான் சபைக்கு செல்வதற்கும் ஞானஸ்தானம் எடுப்பதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் 1990 இல் நான் இந்தியா செல்ல நேர்ந்தது அங்கே நான் ஞான ஸ்தானத்தில் பெற்றுக் கொண்டேன் 1991இல் அவருடைய ஊழியத்திற்காக என்னை ஒப்புக் கொடுத்தேன். 1991 வைகாசி மாதம் 5ஆம் திகதி  ஈஷி பூரண சுவிசேஷ சபையை இந்தியாவில் ஆரம்பிக்க தேவன் கிருபை செய்தார். தேவ கிருபையால் ஊழியங்கள் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1993 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எமது சபையானது மூன்று கிளைச் சபைகளாக பெருகியது.
1994 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள சீயோன் கிறிஸ்தவ சபையில் போதகராக அபிஷேகம் பண்ணப்பட்டேன். பின்பு தேவன் இலங்கையில் ஊழியத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கொடுத்தார். தேவனுடைய சித்தத்தின்படி 1995 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இலங்கையிலுள்ள வவுனியா மாவட்டத்தில் அதாவது சிதம்பரபுர அகதிமுகாமில் ஊழியத்தினை தொடங்க தேவன் கிருபை செய்தார்.
இந்த ஊழியத்தின் மூலம் அநேக ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இதனால் சிதம்பரபுரத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்ட நேர்ந்தது. 1998இல் தேவனுடைய கிருபையால் அடித்தள வேலைகளை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த சபையின் கட்டுமான பணிக்கு எதிராக அரசாங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களிடம் இருந்து பல தடைகள் வந்தன. ஆனால் தேவ கிருபையினாலும் அனைவரின் ஊக்கமான ஜெபத்தினாலும் ஒரு மாதம் கழித்து மீண்டும் கட்டுமான பணிகள் தொடர்ந்தது. 1998 ஆவணி மாதத்தில் சபை வெற்றிகரமாக கட்டி பிரதிஷ்டை பண்ணப்பட்டது. அத்தோடு அதே ஆண்டில் பல சமூக தொண்டுகளும் செய்ய ஆரம்பித்தோம் மருத்துவ முகாம்கள் பெண்களுக்கான தொழில் பயிற்சிகள் சிறுவர் இல்லங்கள் என பல குடும்பங்கள் பயன்பெறும் பொருட்டு நற்பணிகள் தொடர்ந்தன. 2002 இல் இந்தியாவில் இருந்து போதகர்களை வரவழைத்து வேதாகம பாடசாலையை ஆரம்பித்தோம் (அகாபே வேதாகம பாடசாலை) அதிலே அநேக தேவ ஊழியர்கள் கற்றுக்கொண்டு தேவனுடைய நாமம் மகிமைக்கென்று ஊழியங்களை செய்வதற்கு தேவன் எம்மை ஒரு கருவியாக பயன்படுத்தினார்.
2004 ஆம் ஆண்டு தை மாதத்தில் இருந்து தேவன் பல வெளிதேச ஊழிய வாசலைத் திறந்தார். பின்பு வவுனியா நகரப்பகுதியில் தேவனுடைய ஊழியத்தை ஆரம்பித்தோம்.
2007 ஆம் ஆண்டில் இறம்பைகுளத்தில் ஒரு நிலத்தை வாங்கி 50 அடியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைக்க தேவன் உதவினார். அந்தப்படியே ஊழியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த உள்நாட்டு யுத்தம் நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஊழியங்களை செய்ய தேவன் கிருபை பாராட்டினார்.
தேவன் பேசிய பிரகாரமாக 2010 ஆம் ஆண்டில் சபை கட்டுமான பணிகள் தொடங்கி 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ம் திகதி சபை முழுமையாக கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் தேவனுடைய வார்த்தையை இங்கு பகிர்ந்து கொண்டார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஜெர்மனி நாட்டில் பேராயராக பிரதிஷ்டை பண்ணப்பட்டேன். அதனைத் தொடர்ந்து தேவன் என்னையும் என்னுடைய ஊழியத்தையும் இதுவரைக்கும் எல்லா தடைகளையும் நீக்கி அற்புதமாக நடத்தி வருகின்றார்.
எனது குடும்பம்…
எனது மனைவி ரா.விக்டோரியா என் ஊழிய பாதையில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். எனக்கு ஆறு பிள்ளைகள்.
எனது முதல் மகன் அஜந்தன் ரொமோல்ட் சபையின் செயலாளராக பணியாற்றுகிறார். அவரின் மனைவி அ. அனுசியா இவருக்கு இரண்டு பிள்ளைகள் அன்பு நிக்கோலஸ், நேசி நிக்கோலஸ்.
இரண்டாவது மகன் அன்ரனி பிரான்சிஸ் சிதம்பரபுர சபைக்கு பொறுப்பாளராக பணியாற்றுகிறார். அவரின் மனைவி அ. எஸ்தர் ரொஷானி இவரின் மகன் ஜாக்சன்.
மூன்றாவது மகன் அன்ரூ இவர் சிதம்பரபுர சபைக்கு பொறுப்பாளராகவும் சபையின் மீடியாவுக்கு பொறுப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
நான்காவது மகள் கிருபா ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
ஐந்தாவது மகள் கிருஷாந்தி மட்டக்களப்பு உயர் கல்வியை கற்கின்றார்.
ஆறாவது மகன் கிறிஸ்டோ இம்மானுவேல் கொழும்பில் உயர்கல்வியை கற்கின்றார்.

என்னையும் என் குடும்பத்தையும் ஊழியத்தையும் உங்கள் ஜெபங்களில் தாங்கிக் கொள்ளுங்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.