HISTORY OF ISHI FULL GOSPEL MISSION
Beginning of Ishi mission and Indian ministry
ஈஷி பூரண சுவிசேஷ சபையானது 1991 வைகாசி மாதம் 5ஆம் திகதி பேராயர் ராஜசிங்கம் அவர்களால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. தேவ கிருபையால் ஊழியங்கள் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1993 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எமது சபையானது மூன்று கிளைச் சபைகளாக பெருகியது.
1994 ஆம் ஆண்டு எமது போதகர் இந்தியாவிலுள்ள சீயோன் கிறிஸ்தவ சபையில் போதகராக அபிஷேகம் பண்ணப்பட்டார். தேவன் நமது பேராயருக்கு இலங்கையில் ஊழியத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கொடுத்தார். தேவனுடைய சித்தத்தின்படி 1995 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இலங்கையிலுள்ள வவுனியா மாவட்டத்தில் அதாவது சிதம்பரபுர அகதிமுகாமில் ஊழியத்தினை தொடங்கினார்.
இந்த ஊழியத்தின் மூலம் அநேக ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இதனால் எமது போதகர் சிதம்பரபுரத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்ட தீர்மானித்தார். 1998இல் தேவனுடைய கிருபையால் அடித்தள வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் இந்த சபையின் கட்டுமான பணிக்கு எதிராக அரசாங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களிடம் இருந்து பல தடைகள் வந்தன. ஆனால் தேவ கிருபையினாலும் அனைவரின் ஊக்கமான ஜெபத்தினாலும் ஒரு மாதம் கழித்து மீண்டும் கட்டுமான பணிகள் தொடர்ந்தது. 1998 ஆவணி மாதத்தில் சபை வெற்றிகரமாக கட்டி பிரதிஷ்டை பண்ணப்பட்டது. அதேநேரம் எமது போதகர் அவர்களினால் தொழில்பயிற்சி சேவைகள் தொடங்கி பல சமூகப் பணிகளும் செய்யப்பட்டது இதன் மூலம் பல குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து வேதாகம பாடசாலை, சிறுவர் இல்லம் ஆகிய ஊழியங்களும் தேவ கிருபையால் ஆரம்பிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு 2 பிரிவு வேதாகம பாடசாலை மாணவர்கள் பட்டம் பெற்றார்கள். பின்பு 2003 ஆம் ஆண்டு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களால் சிறுவர் இல்லம் கைப்பற்றப்பட்டது.
Vavuniya ministry.
In 2004 God helped our Bishop to extend his ministry to Vavuniya town. So, our Bishop stayed in a rent house for about six months and by God’s effortlessness our Lord Jesus Christ help to build an own house at Kovilkulam. Likewise, God opened new doors towards Foreign ministry from 2004. Thereafter during Tsunami our Bishop started another children home and later on it was taken over by German organization.
By 2007, Almighty God helped him with buying a land in Rambaikulam and to construct an impermanent shed of 50 feet. Then the ministry was continued by the God’s grace. During years 2006 to 2009 as we all knew there was a major war in Sri Lanka. Indeed, even all through the war time God help the ministry to spread God’s love and help towards affected people.
Later on in 2010, according to God’s word, Lord Jesus help to start the foundation work for the church construction And the Church was dedicated in 21st of March 2012.According to God’s prophecy, he is fulfilling his words towards “Ishi full Gospel mission” and he is helping our beloved Bishop , pastors and Church believers to live for him and to spread his love to others too.
Ishi full Gospel mission is now spreading God’s Love and his salvation indifferent ways such as hospital ministries, children ministries, free medical camps, providing free reading glasses to the poor people and giving first-aid boxes to the rural area schools and etc.
God Almighty is doing extraordinary things through Ishi Mission and please uphold our Bishop and his ministries through your prayers.
சிதம்பரபுரத்தில் இருந்து வவுனியா நகரத்திற்கு ஊழியத்தை விரிவுபடுத்துவதற்கு தேவன் கிருபை பாராட்டினார். 2004ஆம் ஆண்டு சிதம்பரபுரத்திலிருந்து வவுனியாவுக்கு வந்து ஆறு மாதங்களாக ஒரு வாடகை வீட்டில் இருந்து பின்பு ஒரு சொந்த வீடு கட்டுவதற்கு தேவன் உதவினார். அதேபோல 2004 ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களை செய்வதற்கு புதிய பாதைகளையும் திறந்தார்.
2007 ஆம் ஆண்டில் இறம்பைகுளத்தில் ஒரு நிலத்தை வாங்கி 50 அடியில் ஒரு தற்காலிக கூடாரம் அமைக்க தேவன் உதவினார். அந்தப்படியே ஊழியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த உள்நாட்டு யுத்தம் நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஊழியங்களை செய்ய தேவன் கிருபை பாராட்டினார்.
தேவன் பேசிய பிரகாரமாக 2010 ஆம் ஆண்டில் சபை கட்டுமான பணிகள் தொடங்கி 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி சபை முழுதுமாய் கட்டப்பட்டு பிரதிஷ்டை பண்ணப்பட்டது. தேவன் தமது சித்தத்தின்படியும் அவரின் வாக்குத்தத்தத்தின் படியும் எமது போதகரை அவரின் ஊழியத்தில் நடத்தி வருகிறார்.
ஈஷி பூரண சுவிசேஷ சபை பலவிதமான ஊழியங்களை செய்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்து வருகிறது.